தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

1009 பேருக்கு கரோனா பாதிப்பு - இன்றைய கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 1009 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

1009 பேருக்கு கரோனா பாதிப்பு
1009 பேருக்கு கரோனா பாதிப்பு

By

Published : Oct 31, 2021, 10:55 PM IST

சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 307 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் புதிதாக ஆயிரத்து 9 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 2 லட்சத்து 35 ஆயிரத்து 899 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம் 27 லட்சத்து 2 ஆயிரத்து 623 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டன. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 11 ஆயிரத்து 492 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 1,183 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 26 லட்சத்து 55 ஆயிரத்து 15 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

தனியார் மருத்துமனையில் 5 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 14 நோயாளிகளும் என 19 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 116 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  1. சென்னை - 554672
  2. கோயம்புத்தூர் - 246780
  3. செங்கல்பட்டு - 171777
  4. திருவள்ளூர் - 119370
  5. ஈரோடு - 104303
  6. சேலம் - 99893
  7. திருப்பூர் - 95405
  8. திருச்சிராப்பள்ளி - 77534
  9. மதுரை - 75215
  10. காஞ்சிபுரம் - 74970
  11. தஞ்சாவூர் - 75352
  12. கடலூர் - 64085
  13. கன்னியாகுமரி - 62362
  14. தூத்துக்குடி - 56304
  15. திருவண்ணாமலை - 54968
  16. நாமக்கல் - 52245
  17. வேலூர் - 49864
  18. திருநெல்வேலி - 49374
  19. விருதுநகர் - 46294
  20. விழுப்புரம் - 45857
  21. தேனி - 43571
  22. ராணிப்பேட்டை - 43436
  23. கிருஷ்ணகிரி - 43570
  24. திருவாரூர் - 41461
  25. திண்டுக்கல் - 33099
  26. நீலகிரி - 33566
  27. கள்ளக்குறிச்சி - 31364
  28. புதுக்கோட்டை - 30183
  29. திருப்பத்தூர் - 29301
  30. தென்காசி - 27357
  31. தர்மபுரி - 28425
  32. கரூர் - 24091
  33. மயிலாடுதுறை - 23280
  34. ராமநாதபுரம் - 20564
  35. நாகப்பட்டினம் - 21074
  36. சிவகங்கை - 20195
  37. அரியலூர் - 16854
  38. பெரம்பலூர் - 12067
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1028
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1085
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ABOUT THE AUTHOR

...view details