சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை நவம்பர் 14ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவல், “தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 374 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 805 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 805 பேருக்கு கரோனா பாதிப்பு - coronavirus update
தமிழ்நாட்டில் புதிதாக 805 பேருக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
![தமிழ்நாட்டில் புதிதாக 805 பேருக்கு கரோனா பாதிப்பு coronavirus](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13634270-970-13634270-1636908197823.jpg)
மாநிலத்தில் இதுவரை 5 கோடியே 17 லட்சத்து 18 ஆயிரத்து 208 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 27 லட்சத்து 14 ஆயிரத்து 830 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 9 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
கரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை தீவிரமாக இருந்த பொழுது அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆக்சிஜன் வசதி மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் உருவாக்கப்பட்ட படுக்கைகளில் 75 ஆயிரத்து 204 படுக்கைகள் காலியாக உள்ளன. மேலும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட 35 ஆயிரத்து 848 படுக்கைகளில் 35 ஆயிரத்து 817 படுக்கைகள் காலியாக உள்ளன.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்த 929 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 68 ஆயிரத்து 930 என உயர்ந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 6 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் என 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மேலும் புதிதாக 128 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 125 நபர்களுக்கும், ஈரோட்டில் 708 நபர்களுக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தேனி மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம் ஆகியவற்றில் புதிதாக ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இன்று கண்டறியப்படவில்லை.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை 5,56,296
- கோயம்புத்தூர் 2,48,302
- செங்கல்பட்டு 1,72,827
- திருவள்ளூர் 1,19,803
- ஈரோடு 1,05,202
- சேலம் 1,00,620
- திருப்பூர் 96,267
- திருச்சிராப்பள்ளி 78,031
- மதுரை 75,359
- காஞ்சிபுரம் 75,301
- தஞ்சாவூர் 75,787
- கடலூர் 64,283
- கன்னியாகுமரி 62,608
- தூத்துக்குடி 56,425
- திருவண்ணாமலை 55,093
- நாமக்கல் 52,823
- வேலூர் 50,028
- திருநெல்வேலி 49,527
- விருதுநகர் 46,359ஸ
- விழுப்புரம் 45,956
- தேனி 43,589
- ராணிப்பேட்டை 43,503
- கிருஷ்ணகிரி 43,723
- திருவாரூர் 41,704
- திண்டுக்கல் 33,154
- நீலகிரி 33,809
- கள்ளக்குறிச்சி 31,493
- புதுக்கோட்டை 30,268
- திருப்பத்தூர் 29,355
- தென்காசி 27,379
- தருமபுரி 28,635
- கரூர் 24,356
- மயிலாடுதுறை 23,324
- ராமநாதபுரம் 20,594
- நாகப்பட்டினம் 21,201
- சிவகங்கை 20,318
- அரியலூர் 16,897
- பெரம்பலூர் 12,089
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1029
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1085
ரயில் மூலம் வந்தவர்கள் 428
இதையும் படிங்க : சென்னைக்கு இனி விடியல்: மாஸ்டர் பிளான்... மா.சு. சொல்லும் தகவல்!