தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு கரோனா தடுப்பு: தன்னார்வலராகப் பணியாற்ற விவரங்கள் வெளியீடு - district Level Coordinating Committee Details

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் பேரிடரில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் குறித்து அரசு தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

Tamil Nadu Corona Prevention district Level Coordinating Committee Details
Tamil Nadu Corona Prevention district Level Coordinating Committee Details

By

Published : May 27, 2021, 4:06 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 19ஆம் தேதியன்று கரோனா பெருந்தொற்று நோய் இரண்டாம் அலை பரவலைத் தடுக்கும் வகையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கரோனா பெருந்தொற்று நோயை ஒழிக்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட, மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மாவட்டங்களும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநில அளவிலான இந்த ஒருங்கிணைப்புக் குழு தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தேசிய சுகாதார இயக்க வளாகத்தில் இயங்கி வரும் கட்டளை மையத்தில் (War Room - Unified Command Centre) தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தன்னலம் கருதாமல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து மக்களுக்கு உதவும் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவால் https://www.facebook.com/tnngocoordination/ என்ற ஃபேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 87544 91300என்ற அலைபேசி எண் மூலமாகவும், tnngocoordination@gmail.com என்ற இணையதளம் வாயிலாகவும் மாநில ஒருங்கிணைப்புக் குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.

ABOUT THE AUTHOR

...view details