இன்று தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 357 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 28 ஆயிரத்து 864 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் இன்று மட்டும் 493 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றிலிருந்து 32 ஆயிரத்து 982 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்து 68 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்து 39 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது.
குறையும் கரோனா பாதிப்பு:
மே 21ஆம் தேதி 36 ஆயிரத்து 184 ஆக இருந்த கரோனா பாதிப்பு ஒரு வார காலத்திற்குள் அதாவது நேற்று (மே.29) 30 ஆயிரத்து 16 ஆக குறைந்தது. இந்நிலையில் இன்று கரோனா பாதிப்பு மேலும் குறைந்திருப்பது பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஞ
இன்றைய அதிகபட்ச பாதிப்பு:
சென்னையில் புதிதாக வைரஸ் தொற்றினால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து689 என குறைய தொடங்கியுள்ளது. மேலும் கோயம்புத்தூரில் 3 ஆயிரத்து 537 நபர்களுக்கும், செங்கல்பட்டில் ஆயிரத்து 194 நபர்களுக்கும், ஈரோட்டில் ஆயிரத்து 784 நபர்களுக்கும், சேலத்தில் 1795 நபர்களுக்கும், திருப்பூரில் ஆயிரத்து 496 நபர்களுக்கும், திருச்சியில் ஆயிரத்து 128 நபர்களுக்கும் வைரஸ் தொற்று புதிதாக பதிவாகியுள்ளது.