தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்

தமிழ்நாட்டில் நேற்று(28.4.2022) ஒரேநாளில் 17 ஆயிரத்து 370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

By

Published : Apr 29, 2022, 11:11 PM IST

தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழ்நாட்டில் நேற்று(28.4.2022) ஒரேநாளில் 17 ஆயிரத்து 370 மெகாவாட் மின்சாரம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய உச்சபட்ச நுகர்வாக, கடந்த மார்ச் மாத இறுதியில் 17 ஆயிரத்து 196 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மின்தடை பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி மின் நுகர்வு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் மெய்யநாதன்

ABOUT THE AUTHOR

...view details