சென்னை: தமிழ்நாட்டில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அருள் அன்பரசு ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்புப் பேட்டியளித்தார்.
அப்போது அவர், 'தமிழ்நாட்டில் நிதிநிலை குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில் தமிழ்நாடு அரசின் கடன் சுமை 5 லட்சத்து 70 ஆயிரத்து 189 கோடியாக உள்ளது. இதற்குத் தேவையான வட்டியை செலுத்துவதற்கு பெரும்பகுதி செலவாகிறது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், நாளை (ஆகஸ்ட் 13) நடக்கவிருக்கும் நிதி நிலை அறிக்கையில் தேவையற்ற இலவசத் திட்டங்களை குறைக்க வேண்டும்.
கரோனா தொற்று காலத்தில் நான்காயிரம் நிதி கொடுத்தது, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை நிதிநிலை சரியான பின்னர் செயல்படுத்தலாம்.