தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் ஒமைக்ரான்: முதலமைச்சர் நாளை ஆலோசனை - ஒமைக்ரான் குறித்து ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாட்டில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

tamil nadu cm mk stalin
tamil nadu cm mk stalin

By

Published : Dec 23, 2021, 6:05 PM IST

சென்னை: தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் தொற்று போட்ஸ்வானா, ஹாங்காங், பிரிட்டன், இந்தியா, சீனா உள்ளிட்ட 100 நாடுகளுக்கும் மேல் பரவிவிட்டது. ஒமைக்ரான், கரோனா தொற்றைவிட வேகமாக பரவும் தன்மை கொண்டதால், உலக நாடுகள் பீதியில் உள்ளன.

இதன்காரணமாக சீனா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த வாரத்தில் 30 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் 236 பேருக்கு உறுதியாகி உள்ளது.

மகாராஷ்டிரா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், மாநில அரசுகள் உடனடி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் முனைப்பில் உள்ளன. அதேபோல தமிழ்நாட்டில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துறை சார்ந்த அலுவலர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இதில், தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்துதல், கட்டுபாடுகள் விதித்தல், இரவு நேர ஊரங்கு, வார ஊரடங்கு உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details