சென்னை: தமிழ்நாட்டின் முக்கிய தொழில்களில் ஒன்றான பட்டாசு தயாரிப்பில் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா 4 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும், உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.