தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள Bewell என்ற தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு 19 நாள்கள் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு கட்டணமாக 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதவிர, பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் அதிக கட்டணம் வசூவிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.