தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உயிரிழந்த விவசாயி கணேசன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி! - உயிரிழந்த விவசாயி கணேசன்

தர்மபுரியில் உயிரிழந்த விவசாயி கணேசன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விவசாயி கணேசன் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி
விவசாயி கணேசன் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி

By

Published : Apr 17, 2022, 2:08 PM IST

தர்மபுரி மாவட்டம், பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாள்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர் தற்கொலையால் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவர் உயிரிழந்த செய்தியைக் கேட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று, உயிரிழந்த விவசாயி கணேசன் குடும்பத்தாருக்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

பின்னர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிட ஆணையிட்டுள்ளார். மேலும் இந்த அரசு, என்றென்றும் விவசாயிகளுக்கு உற்ற தோழனாக இருக்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:விவேக் எனும் வித்தக கலைஞன்!

ABOUT THE AUTHOR

...view details