சென்னை தலைமைச் செயலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கனவு இல்லத் திட்டத்தின் கீழ், ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கப்பட்டது.
இதனை தமிழ் மொழியில் வெளியான தலைசிறந்த தமிழ் இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் சாகித்திய அகாதமி விருது, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ஆகிய விருதுகளை பெற்ற ந. செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், கவிஞர் புவியரசு என்கிற சு. ஜகன்னாதன், முனைவர் இ.சுந்தரமூர்த்தி, பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகம், முனைவர் கு.மோகனராசு, இமையம் என்கிற வெ.அண்ணாமலை ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
அந்த வகையில் 2004ஆம் ஆண்டு “வணக்கம் வள்ளுவ” எனும் கவிதை நூலிற்காக சாகத்திய அகாதமி விருது மற்றும் 2018ஆம் ஆண்டு மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினையும் பெற்ற ந. செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பனுக்கு சென்னை, திருமங்கலம், தெற்காசிய விளையாட்டு கூட்டமைப்பு கிராமக் கோட்டம், 304 உயர் வருவாய்ப் பிரிவு முதல் தளம் அடுக்குமாடி குடியிருப்பு எண்.சி2/235 இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டில் “கையொப்பம்” எனும் கவிதை நூலிற்காக சாகத்திய அகாதமி விருது பெற்ற கவிஞர் புவியரசு என்கிற சு. ஜகன்னாதன் கோவை வீட்டுவசதி பிரிவு – கணபதி திட்டப்பகுதி 48, உயர் வருவாய்ப் பிரிவு குடியிருப்புகளில் அடுக்குமாடி குடியிருப்பு எண்.1 இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எழுத்தாளர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் தமிழ் இலக்கியப் பணிகளுக்காக 2012ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற முனைவர் இ. சுந்தரமூர்த்தி சென்னை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தெற்காசியக் கூட்டமைப்பு விளையாட்டு கிராமக் கோட்டத்தில், கோயம்பேடு திட்டப்பகுதி 304 உயர் வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி குடியிருப்பு எண்.சி2/231இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு ஆண்டு “அஞ்ஞாடி“ எனும் புதினத்திற்காக சாகத்திய அகாதமி விருது பெற்ற பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகம் சென்னை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தெற்காசியக் கூட்டமைப்பு விளையாட்டு கிராமக் கோட்டத்தில், கோயம்பேடு திட்டப்பகுதி 304 உயர் வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி குடியிருப்பு எண்.பி1/3இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியப் பணிகளுக்காக 2014ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற முனைவர் கு. மோகனராசு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், அண்ணாநகர் சாந்தி காலனி நடுவாங்கரை திட்டம், 16 உயர் வருவாய்ப் பிரிவு குடியிருப்புகளில் அடுக்குமாடி குடியிருப்பு எண்.474/1 இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு “செல்லாத பணம்” எனும் புதினத்திற்காக சாகத்திய அகாதமி விருது பெற்ற இமையம் என்கிற வெ. அண்ணாமலை சென்னை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தெற்காசியக் கூட்டமைப்பு விளையாட்டு கிராமக் கோட்டத்தில் 304 உயர் வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி குடியிருப்பு எண்.பி1/65இல் இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கலைஞரை காணோம்.. அரசு ஆசிரியர்களின் ஆதங்கம்...