தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பில்லை! - சத்யப்பிரதா சாஹூ - சட்டப்பேரவைத் தேர்தல் முன்னரே நடத்த வாய்ப்பு குறைவு
12:08 December 31
சென்னை: தமிழகத்தில் முன்கூட்டியே சட்டப்பேரவை தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவு என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
2021 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில் அதனை முன்கூட்டியே நடத்த வாய்ப்பு குறைவு என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும், கரோனா தொற்று காரணமாக ஒரு வாக்குச்சாவடியில் 1,000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும், தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் விதமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக தற்போது 67 ஆயிரமாக இருக்கும் வாக்குச்சாவடி மையங்களை, 95 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறிய சாஹூ, கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படவுள்ளதால், கூடுதல் மின்னணு இயந்திரங்கள் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படவுள்ளது என்றும் சத்யப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை வஞ்சிக்கும் அதிமுக அரசு’ - ஸ்டாலின் குற்றச்சாட்டு