முதலமைச்சர் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் - தமிழ்நாடு அரசு
![முதலமைச்சர் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் Tamil Nadu Government](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10406751-175-10406751-1611806149071.jpg)
09:22 January 28
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நாளை மாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பிப்.2ஆம் தேதி கலைவாணர் அரங்கத்தில் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கவிருக்கிறது.