தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மீண்டும் தலைதூக்கும் கரோனா: நாளை அமைச்சரவைக் கூட்டம் - Centenary of the Legislature

நிதிநிலை அறிக்கை, தொழில் முதலீடு, மேகதாது அணை விவகாரம், கரோனா அதிகரிப்பு ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க நாளை (ஆகஸ்ட் 4) தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

அமைச்சரவைக் கூட்டம்
அமைச்சரவைக் கூட்டம்

By

Published : Aug 3, 2021, 6:30 AM IST

நடந்து முடிந்த சட்டபேரவைத் தேர்தலுக்குப் பின்பு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், நாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

இதில், ஆகஸ்ட் கடைசி வாரம் வாக்கில் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரை நடத்துவது குறித்தும், துறை ரீதியாக நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் அறிவிப்பது பற்றியும் விவாதிக்கப்பட இருக்கிறது.

அதேபோல் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது, பொருளாதார ரீதியாகத் தொழில் முதலீட்டை ஈர்ப்பது, மேகதாது பிரச்சினையில் சட்ட ரீதியாக எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவையும், சீர்திருத்தச் சட்டங்களும் - ஓர் பார்வை

ABOUT THE AUTHOR

...view details