சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (அக் 14) நடைப்பெற்றது. வரும் 17ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அதில் தாக்கல் செய்யப்பட உள்ள சட்ட மசோதாக்கள், தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டுள்ள ஆணையத்தின் அறிக்கைகள், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அரசிடம் பல்வேறு ஆணையங்கள் தாக்கல் செய்த அறிக்கைகள் மற்றும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் அளிக்கக்கூடிய பதில்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.