2022-23ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துவருகிறார். அப்போது நிதியமைச்சர் தெரிவிக்கையில், சட்ட ஒழுங்கைத்திறம்பட நிலைநாட்டுவதன் வாயிலாக தமிழ்நாடு ஓர் அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றைத்தடுப்பதற்கு இந்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்துவருகின்றது.
தமிழ்நாடு பட்ஜெட் 2022: காவல்துறைக்கு ரூ.10,285 கோடி
தமிழ்நாடு காவல்துறை சார்ந்த திட்டங்களுக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
வளர்ந்து வரும் புறநகர்ப்பகுதிகளில் காவல்துறை திறம்படச் செயலாற்றிட சென்னை காவல் ஆணையரகம் மூன்றாகப்பிரிக்கப்பட்டு ஆவடியிலும், தாம்பரத்திலும் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. மேலும், இத்துறைக்குத் தேவைப்படும் அனைத்துக் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும். அந்த வகையில் தமிழ்நாடு காவல்துறைக்காக ரூ.10,285 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். குறிப்பாக காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:எதிர்க்கட்சி மீது பொய் வழக்கு போடக்கூடாது... அதிமுக வெளிநடப்பு...