தமிழ்நாடு பட்ஜெட் 2022-23 எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி | |
துறைகள் | நிதி ஒதுக்கீடு |
தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடுத்துறை | 82.86 கோடி ரூபாய் |
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை | 7,474 கோடி ரூபாய் |
காவல்துறை | 10,285 கோடி ரூபாய் |
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை | 496.52 கோடி ரூபாய் |
நீதித்துறை | 1,461 கோடி ரூபாய் |
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை | |
நகைக்கடன் தள்ளுபடி | 1,000 கோடி ரூபாய் |
பயிர்க்கடன் தள்ளுபடி | 2,531 கோடி ரூபாய் |
சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி | 600 கோடி ரூபாய் |
வரவு-செலவுத் திட்டத்தில் உணவு மானியம் | 7,500 கோடி ரூபாய் |
மொத்தம் | 13,176 கோடி ரூபாய் |
நீர்வளத் துறை | 7,338 கோடி ரூபாய் |
கால்நடைப் பராமரிப்புத்துறை | 1,314 கோடி ரூபாய் |
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை | 849.21 கோடி ரூபாய் |
பள்ளிக்கல்வித் துறை | |
இல்லம் தேடிக் கல்வி திட்டம் | 200 கோடி ரூபாய் |
முன்மாதிரிப் பள்ளிகள் (Model Schools) திட்டம் | 125 கோடி ரூபாய் |
'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்' என்ற மாபெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், அரசுப் பள்ளிகளில், தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். | 1,300 கோடி ரூபாய் |
அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்காட்சிகள், இலக்கிய திருவிழா திட்டங்கள். | 5.6 கோடி ரூபாய் |
மொத்தம் | 36,895 கோடி ரூபாய் |
உயர் கல்வித்துறை | |
புதிய வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வகங்கள், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம் | 250 கோடி ரூபாய் |
முன்னுரிமை அடிப்படையில் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணங்களுக்கான திட்டம் | 204 கோடி ரூபாய் |
மொத்தம் | 5,668 கோடி ரூபாய் |
நான் முதல்வன் திட்டம் | 50 கோடி ரூபாய் |
விளையாட்டு மேம்பாட்டுத் துறை | |
தமிழ்நாட்டிலிருந்து உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க, தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்கத் தேடல் திட்டம் | 25 கோடி ரூபாய் |
பல்வேறு விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்ற வடசென்னையில், இளைஞர்களின் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் | 10 கோடி ரூபாய் |
மொத்தம் | 293.26 கோடி ரூபாய் |
மக்கள் நல்வாழ்வுத்துறை | 17,901 கோடி ரூபாய் |
சமூக நலத்துறை | 5,922 கோடி ரூபாய் |
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை | 4,281 கோடி ரூபாய் |
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை | 1,230.37 கோடி ரூபாய் |
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை | 838 கோடி ரூபாய் |
ஊரக வளர்ச்சித் துறை | 26,647 கோடி ரூபாய் |
நகராட்சி நிர்வாகத்துறை | 20,400 கோடி ரூபாய் |
குடிநீர் வழங்கல் துறை | 3,000 கோடி ரூபாய் |
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி | 8,737 கோடி ரூபாய் |
நெடுஞ்சாலைகள் துறை | 18,218 கோடி ரூபாய் |
போக்குவரத்துத்துறை | 5,375 கோடி ரூபாய் |
எரிசக்தித் துறை | 19,297 கோடி ரூபாய் |
தொழிலாளர் நலத்துறை | 2,353 கோடி ரூபாய் |
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை | 911 கோடி ரூபாய் |
தொழில் துறை | 3,267 கோடி ரூபாய் |
தகவல் தொழில்நுட்பத்துறை | 99.60 கோடி ரூபாய் |
சுற்றுலா- கலை மற்றும் பண்பாட்டுத் துறை | 246.06 கோடி ரூபாய் |
இந்து சமய அறநிலையத்துறை | 340.87 கோடி ரூபாய் |
அரசுப் பணியாளர்கள் நலத்துறை | 19,000 கோடி ரூபாய் |
தமிழ்நாடு பட்ஜெட் 2022-23... எந்தத் துறைக்கு எவ்வளவு... முழுவிவரம் உள்ளே..!
2022-2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். அதன் முழுவிவரம் பின்வருமாறு...
tamil-nadu-budget-2022-23-highlights