தமிழ்நாடு

tamil nadu

7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் அனுமதி தர வேண்டும் - தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன்

By

Published : Oct 26, 2020, 5:53 AM IST

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்க ஆளுநர் எடுத்துக் கொண்ட கால அவகாசம் போதுமானது என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

bjp leader l murugan
bjp leader l murugan

சென்னை :சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய காலகட்டத்தில் மனுதர்மம் என்பது கிடையாது. அம்பேத்கர் உருவாக்கிய சட்டம் மட்டுமே நாட்டில் உள்ளது. மனுசாஸ்திரத்தில் இருப்பதாக கூறி பெண்களை இழிவு படுத்தியவர்களுக்கு, பெண்கள் தக்க சமயத்தில் பதிலடி கொடுப்பார்கள். இந்த செயலைக் கண்டித்து தமிழ்நாடு பாஜக மகளிர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, கூட்டணிக் கட்சியினர் முன்மொழிவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்கு பதில் அளித்த முருகன், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தங்கள் கட்சியின் தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என்றார். தொடர்ந்து 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டிற்கு உடனடியாக ஆளுநர் அனுமதி தர வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க :பாஜகவின் ஊழியர்கள் ஆளுநர்கள்’ : தினேஷ் குண்டுராவ்

ABOUT THE AUTHOR

...view details