தமிழ்நாடு

tamil nadu

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் கான்சப்டே இல்லை... நடந்தது என்ன..?

தமிழ்நாடு சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் என்று யாருடைய பெயரும் பட்டிலில் இடம்பெறவில்லை.

By

Published : Oct 17, 2022, 12:39 PM IST

Published : Oct 17, 2022, 12:39 PM IST

சட்டப்பேரவையில் நடந்தது என்ன
சட்டப்பேரவையில் நடந்தது என்ன

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று (அக். 17) தொடங்கியது. அக்டோபர் 19ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி மற்றும் ஓபிஎஸ், வைத்தியலிங்கம், ஐயப்பன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 62 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் இந்த அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்தனர். இந்த அலுவல் ஆய்வுக்கூட்ட பட்டியலில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று யாருடைய பெயரும் இடம்பெறவில்லை. அதிமுக இருக்கைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தாலும் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரையோ அல்லது ஓ. பன்னீர்செல்வத்தையோ சட்டப்பேரவை ஏற்கவில்லை என்பதே இன்றைய கூட்டம் தெரிவித்திருக்கிறது.

இதையும் படிங்க:அதிமுக சட்டவிதியை மாசுபடாமல் காப்பாற்றும் நிலையில் உள்ளோம் - ஓ. பன்னீர்செல்வம் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details