சென்னை தலைமைச்செயலக வளாகத்திலுள்ள சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் இறுதி நாளான (மார்ச் 24) இன்று,அனைத்து தரப்பு விவசாயிகளின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாகவும் வேளாண் விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் அறிக்கையாக வேளாண் நிதிநிலை 2022-23 அறிக்கை அமைந்துள்ளது என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பதிலுரையின் பேசியபோது அவர், 'முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இளைஞரை போன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதைப் பார்க்கும் பொழுது ஆச்சரியமாக உள்ளது. கொளத்தூர் தொகுதி மக்களை முதலமைச்சர் தாங்கி வருகிறார். வரும் இரண்டு ஆண்டுகளில் கரும்பு பயிர் செய்யும் தொழில், லாபம் உள்ள தொழிலாக மாற்றப்படும்.