தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்! - tamil nadu 6 districts rain

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்

By

Published : May 2, 2019, 5:42 PM IST

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பலத்த காற்றுக்கு வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 38 மற்றும் 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.

இதுவரை, விழுப்புரம் மாவட்டத்தில் 4 செ.மீ, பாண்டிச்சேரி, கடலூர் மாவட்டத்தில் தலா 2 செ.மீ மழையும், திண்டிவனத்தில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details