தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பயணிகள் கவனிக்கவும் தலைப்பு விவகாரம் - மன்னிப்பு கேட்ட படக்குழு! - பயணிகள் கவனிக்கவும் தலைப்பு விவகாரம்

பயணிகள் கவனிக்கவும் படத் தலைப்பு விவகாரத்தில் படக்குழு மன்னிப்பு கோரியுள்ளது. அதுமட்டுமின்றி எழுத்தாளர் பாலகுமாரனுக்கு டைட்டில் கார்டில் நன்றி தெரிவிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

பயணிகள் கவனிக்கவும் தலைப்பு விவகாரம்- மன்னிப்பு கேட்ட படக்குழு!
பயணிகள் கவனிக்கவும் தலைப்பு விவகாரம்- மன்னிப்பு கேட்ட படக்குழு!

By

Published : Apr 26, 2022, 11:47 AM IST

சக்திவேல் என்பவர் இயக்கத்தில் விதார்த், லட்சுமிபிரியா, சந்திரமவுலி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ’பயணிகள் கவனிக்கவும்’. ஏப்ரல் 29ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தின் தலைப்பு தமது தந்தை எழுதிய பயணிகள் கவனிக்கவும் என்ற புத்தகத்தின் தலைப்பு என்றும், தனது அனுமதி இல்லாமல் இந்த தலைப்பை பயன்படுத்தி உள்ளதாக பாலகுமாரனின் மகன் சூர்யா முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு சட்டரீதியாக நோட்டீஸ் அவர் அனுப்பியுள்ளார். இந்நிலையில் படத்தயாரிப்பு தரப்பை சேர்ந்தவர்கள் பாலகுமாரன் மற்றும் அவரது தாயாரை சந்தித்து பேசியுள்ளனர்.

பயணிகள் கவனிக்கவும் தலைப்பு விவகாரம்- மன்னிப்பு கேட்ட படக்குழு!

பட தயாரிப்பு குழு எழுத்துப்பூர்வ மன்னிப்பு கடிதமும் அளித்துள்ளதாக சூர்யா பாலகுமாரன் தெரிவித்துள்ளார். தந்தை பாலகுமாரனுக்கு டைட்டில் கார்டில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளதாகவும், இதனால் புகாரை திரும்ப பெறுவதாக சூர்யா தெரிவித்துள்ளார். சூர்யா தற்போது பாலகுமாரனின் இக்கதையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க:நடிகர் விவேக் பெயரை சாலைக்கு சூட்ட வேண்டும் - முதலமைச்சரிடம் விவேக்கின் மனைவி கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details