1996ஆம் தொடங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் 2001 சட்டப்பேரவைத் தேர்தலிலும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர் 2002ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த தமாகா 2014இல் காங்கிரசிலிருந்து வெளியேறியது.
கடந்த தேர்தல்களைப் போல வரும் உள்ளாட்சித் தேர்தலில் சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் அல்லது ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை ஒதுக்கக்கோரி அக்கட்சி சார்பில் மாநிலத் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
அந்த மனுவை மாநிலத் தேர்தல் ஆணையம் நிராகரித்த உத்தரவை ரத்து செய்துவிட்டு, சைக்கிள், மோட்டார் சைக்கிள் அல்லது ஆட்டோ ரிக்ஷா என மூன்றில் ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்க கோரி தமாகா தலைவர் ஜி.கே. வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.