சென்னை :இதுகுறித்து சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், "தமிழ்நாடு அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படும்.
இனி அரசுத்துறைகளில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை
தமிழ்நாடு அரசுத்துறைகளில் 100 விழுக்காடு மாநில இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில் போட்டித் தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
இதன் மூலம் அரசுத்துறைகளில் 100 விழுக்காடு மாநில இளைஞர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். வேலை வாய்ப்பில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தற்போது கரோனாவால் போட்டித்தேர்வுகள் தாமதமாகியதால் நியமன வயது உச்சவரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும். குறிப்பாக பெண்களுக்கான இடஒதுக்கீடு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அரசுப்பணி தேர்வு - உயர் நீதிமன்றக்கிளை கேள்வி!