சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழ்நாட்டின் மீனவா்கள் 32 போ் சென்னை வந்தனர். தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ராமேஸ்வரம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் மீனவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்த போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை ராணுவம் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 28 தமிழ்நாட்டைச்சேர்ந்த மீனவா்களையும் 4 காரைக்கால் மீனவர்களையும் கைது செய்தது.
தமிழ்நாடு முதலமைச்சா் ஸ்டாலின் முயற்சியால் மத்திய அரசின் உதவியுடன் இலங்கை சிறையில் இருந்து நாகப்பட்டினத்தை சேர்ந்த 13 பேர், மயிலாடுதுறையை சேர்ந்த 3 பேர், ராமநாதபுரத்தை சேர்ந்த 4 பேர், ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 பேர், காரைக்காலை சேர்ந்த 4 பேர் என 32 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.