தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வங்கிப்பணி தேர்வுகளில் தமிழ் புறக்கணிப்பு: திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

வங்கித் தேர்வுகளில் தமிழ் புறக்கணிப்பைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வங்கிப்பணி தேர்வுகளில் தமிழ் புறக்கணிப்பு: திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்
வங்கிப்பணி தேர்வுகளில் தமிழ் புறக்கணிப்பு: திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்

By

Published : May 24, 2022, 10:55 PM IST

சென்னை:வங்கித் தேர்வுகளில் தமிழ் புறக்கணிப்பைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுத்துறை வங்கிகளாக செயல்பட்டு கொண்டிருக்கும் வங்கிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது எனவும், வங்கிகளில் தமிழ் தெரியாதவர்களே அதிகம் பணி புரிகின்றனர் என்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழர்களை வஞ்சிப்பவதாக குற்றம்சட்டி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இவர்களுக்கு தமிழ் தெரிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு சொல்கிறது எனவும், இதனை எதிர்த்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும்; மேலும் இது சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன எனவும் போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

"வங்கி துறையை பொறுத்தமட்டில் எழுத்தர் பணிகளில், அந்தந்த மாநிலத்தில் என்ன மொழி பேசப்படுகிறதோ, அந்த மொழியில் தான் எழுத்து தேர்வு வைக்கப்பட வேண்டும் என விதிமுறை இருந்தது. ஆனால் இதனை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது", என திராவிடர் கழக புறநகர் மாவட்ட இளைஞரணியினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கடப்பாரை மூலம் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயற்சி

ABOUT THE AUTHOR

...view details