சின்னக் கலைவாணர் எனப் போற்றப்படும் ஜனங்களின் கலைஞன் விவேக் நெஞ்சுவலி காரணமாக நேற்று (ஏப்ரல் 16) சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு எக்மோ மருத்துவ முறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17) அதிகாலை 4.35 மணியளவில் காலமானார். இதனை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது இறப்புக்குத் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துவருகின்றனர்.
முன்னதாக நேற்று முன்தினம் (ஏப்ரல் 15) அவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் விவேக் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் நேற்று விளக்க அளித்தனர். அதில், "காலை 11 மணியளவில் சுயநினைவு இல்லாமல் விவேக் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.
கரோனா தடுப்பூசிக்கும் விவேக்கிற்கு ஏற்பட்ட நெஞ்சுவலிக்கும் சம்பந்தம் இல்லை. கரோனா தடுப்பூசியால் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை" எனத் தெரிவித்திருந்தது.
மதுரை மண்ணின் மைந்தன்