சென்னை:தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. தற்போது சென்னையை அடுத்த தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளை இணைத்து 'தாம்பரம் பகுதி' மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அவசரச் சட்டம் மூலம் தமிழ்நாட்டில் 20ஆவது மாநகராட்சியாக தாம்பரம் மாநகராட்சி உதயமானது.
கடந்த வாரத்தில் கும்பகோணம் தரம் உயர்த்தப்பட்டு, மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'ஒரு முறை கூட நேரில் பார்த்ததில்லை' - புனித் நினைவிடத்தில் விஜய்சேதுபதி அஞ்சலி