தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தூய்மைப் பணியில் ஈடுபட்டு வாக்குச் சேகரித்த டி.கே.எம். சின்னையா! - Tambaram ADMK Candidate TKM Chinnaya

சென்னை: தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டி.கே.எம். சின்னையா தூய்மைப் பணியாளர்களுடன் சேர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார்.

டி.கே.எம் சின்னையா
டி.கே.எம் சின்னையா

By

Published : Mar 29, 2021, 5:47 PM IST

அதிமுக தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.எம். சின்னையா அத்தொகுதிக்குள்பட்ட பகுதியில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்துவருகிறார்.

தூய்மைப் பணியில் ஈடுபட்டு வாக்குச் சேகரித்த அதிமுக வேட்பாளர் டி.கே.எம். சின்னையா
அபோது தாம்பரம் நகராட்சி பகுதிக்குள்பட்ட 22ஆவது வார்ட் பகுதியில் எம்ஜிஆர் தெருவில் வீடு வீடாக அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இலவச சலவை இயந்திரம், குடும்பத் தலைவிக்கு 1500 ரூபாய், சோலார் அடுப்பு உள்பட திட்டங்களை எடுத்துரைத்து இரட்டை இலைக்கு வாக்குச் சேகரித்தார்.
அபோது அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார். பின்னர் அப்பகுதி முழுவதும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளைக் கேட்டவாறு சென்றார்.

ABOUT THE AUTHOR

...view details