தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத தாசில்தாருக்கு நூதன தண்டனை!! - Ordered to remain in court till evening

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் தாசில்தார் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரியதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, நேற்று மாலை வரை அவர் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என நூதன தண்டனை வழங்கியது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரிய தாசில்தார்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரிய தாசில்தார்

By

Published : Aug 6, 2022, 7:59 AM IST

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகா, கடலடி கிராமத்தில் பொது பாதை ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி முருகன் என்பவர் தொடர்ந்த வழக்கில், 12 வாரங்களில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க கடந்த 2017 டிசம்பரில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று முருகன் தரப்பில் 2018ல் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி அமர்வு, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாத சம்பந்தப்பட்ட தாசில்தாரரை குற்றவாளி என அறிவித்தது.

தண்டனை விபரம் அறிவிப்பதற்காக அவரை நேற்று நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரப்படி நேற்று நேரில் ஆஜரான பெண் தாசில்தார் லலிதா, நீதிபதிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும், ஆக்கிரமிப்பை 3 வாரங்களில் அகற்றுவதாக அரசு தரப்பிலும் உறுதியளிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பெண் தாசில்தாரருக்கு கடுமையான தண்டனை விதிக்காமல் நேற்று மாலை நீதிமன்ற நேரம் முடியும் வரை அவரை அங்கு நீதிமன்றத்திலேயே இருக்க உத்தரவிட்டனர். மேலும் மூன்று வாரங்களில் ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுத்தரப்புக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் லைகா புரொடக்சன்ஸ் புகார்

ABOUT THE AUTHOR

...view details