தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வா தீனதயாளன் மாநில மற்றும் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் பங்கேற்று பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இந்த நிலையில் ஷில்லாங்கில் இன்று (ஏப்.18) தொடங்கும் 83ஆவது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கௌஹாத்தியில் இருந்து சக போட்டியாளர்களுடன் காரில் சென்றுள்ளார்.
ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே டிராய்லர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து படுகாயாங்களுடன் விஸ்வா தீனதயாளன் அருகே உள்ள நோங்போ சிவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். விஷ்வாவுடன் பயணித்த ரமேஷ் சந்தோஷ்குமார், அபினாஷ் பிரசன்னாஜி சீனிவாசன், கிஷோர் குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.