சென்னை: பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் டெக்னீசியனாக பணியாற்றி வந்த ஸ்ரீராமன் என்பவருடன், கிருஷ்ணகிரி மாவட்டம், தோப்பூரில் உள்ள அரசு உயர் நிலை ஆசிரியர் பி.ஆதிமணி என்பவர் சேர்ந்து கடந்த 2013, 2014ஆம் ஆண்டுகளில் ரயில்வேயில் பொது மேலாளர், கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோர் ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாங்கித் தருவதாக உத்தரவாதம் அளித்து 26 நபர்களிடம் 37 லட்ச ரூபாய் வரை பெற்றதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் இருவரும் மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வந்த புகாரில் விசாரணை நடத்திய சிபிஐ காவல் துறையினர் ஐசிஎஃப் ஸ்ரீராமன், ஆசிரியர் ஆதிமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.