தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாகனங்கள் மோதி விலங்குகள் பலியாவதை தடுக்க இரவில் போக்குவரத்துக்கு தடை? - How do roads impact wildlife

வாகனங்கள் மோதி விலங்குகள் பலியாவதை தடுக்க, கோவை-மைசூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கும்படி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
MHC

By

Published : Jan 27, 2022, 6:43 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் யானைகள் வேட்டையாடப்படுதல், சாலைகளில் வாகனங்கள் மோதி விலங்குகள் பலியாவதை தடுத்தல் குறித்த வழக்கு நேற்று(ஜன.26) நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கடந்த பத்தாண்டு புள்ளிவிவரங்களின்படி, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி மூன்று சிறுத்தைகள் உள்பட 152 வன விலங்குகள் உயிரிழந்துள்ளன.

தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன போக்குவரத்து, வேகக் கட்டுப்பாட்டு விதிகளை ஓட்டுனர்கள் கடைபிடிக்காது ஆகிய காரணங்களால் விலங்குகள் உயிரிழப்பு ஏற்படுகின்றது.

குறிப்பாக தெங்குமரஹடா மற்றும் பவானி பிரதான சாலை புலிகள் சரணாலயம் வழியாக செல்வதால், இதனை இனப்பெருக்க பகுதியாக கொண்ட 30 விழுக்காடு புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன.

எனவே சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் உள்ள தெங்குமரஹடா கிராம மக்களை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து கோவை-மைசூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கும்படி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:'தாம்பத்திய உரிமைக்காக பரோல் வழங்க முடியாது' - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details