சென்னை:சென்னை ஆலந்தூரில் உள்ள புனித தோமையார் மலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மார்கெட் பகுதியில், மண்டி தெருவில் சாலையோரமாக தங்கி இருந்த முதியவர் மீது இரண்டு மர்ம நபர்கள் பணத்துக்காக கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறிப்பாக இரண்டு கால்கள் செயல்படாத இந்த முதியவரை பேண்ட் துணியை உருவி நிர்வணமாகி தாக்கியுள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த பையை திருடன் திருட முயற்சித்ததும், பையை முதியவர் இறுக்க பிடித்துக் கொண்டதால் போதை ஆசாமிகள் முதியவரை கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.