புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் - Sushil Chandra
19:33 April 12
இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த சுனில் அரோராவின் பதவிக்காலம் இன்றுடன் (ஏப்.12) முடிவடைகிறது. அதனடிப்படையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுஷில் சந்திரா, வரும் 13ஆம் தேதி பொறுப்பு ஏற்க உள்ளார். முன்னதாக இவர் 2019ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார். இவரது பதவியின் கீழ் கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரைவை தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.