சென்னை ஈஞ்சம்பாக்கம் முதல் உத்தண்டி வரையில் கிழக்கு கடற்கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள, சட்டவிரோதமாக கட்டடங்களை இடிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்தப் பகுதியில் சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரனுக்கு சொந்தமான கட்டடம் ஒன்றும் உள்ளது. இதுவும் விதிமீறி கட்டப்பட்டுள்ளது.
இதனை இடிக்க சென்னை மாநகராட்சி ஜனவரி 28ஆம் தேதி நோட்டீஸ் (அறிவிப்பு) வழங்கியது. இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.