டெல்லி:கடந்த 2011 -15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், 3 வழக்குகளைப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பின்னர், சமரசம் செய்யப்பட்டதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் மனு தாக்கல் செய்த நிலையில், செந்தில் பாலாஜி மீது இருந்த குற்ற வழக்கை கடந்தாண்டு ஜூலை 30ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், அவர் மீது குற்றம் சுமத்தியவர்கள் தங்களின் புகார்களையும் வாபஸ் பெற்றனர்.