தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் - செப்டம்பர் 15க்குள் நடத்த உத்தரவு - 9 மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

supreme-court-directs-to-ensure-local-body-elections
supreme-court-directs-to-ensure-local-body-elections

By

Published : Jun 22, 2021, 12:27 PM IST

Updated : Jun 22, 2021, 7:10 PM IST

கடந்த 2019ஆம் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கடந்த ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

விடுபட்ட 9 மாவட்ட உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறாமல் இருந்தது. கரோனா பரவல் காரணமாக விடுப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் தள்ளிவைத்தது.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம் வேண்டும் என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :'கருணாநிதியின் பிறந்தநாளை செம்மொழித் தமிழ் நாளாக அறிவிக்க வேண்டும்!'

Last Updated : Jun 22, 2021, 7:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details