சென்னை: தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களை துணைத் தேர்வில் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக மாணவர்கள் தேர்வினை எதிர்கொள்ளாமல் தவிர்த்து விட்டனர் என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும், சில மாணவர்கள் பள்ளிக்கு வராமல் தொடர்ந்து வேலைக்கு சென்றிருந்தாலும் அவர்களின் பெயர் தேர்வு எழுதுவதற்கான மாணவர்களின் பட்டியலில் பள்ளிகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா?என்ற சந்தேகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், 12ஆம் வகுப்பிற்கு மே5 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்ற பொதுத் தேர்வினை எழுதுவதற்கு 84,4,808 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் மொழித்தேர்வு எழுத 43,562 மாணவர்கள் பங்கேற்கவில்லை. 11 ஆம் தேதி 14,036 மாணவர்கள் பங்கேற்கவில்லை. சரியாக 3.8 % மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவில்லை.
அதேபோல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பத்தாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்ற தேரவினை எழுதுவதற்கு 892740 பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு முதல் நாளில் நடைபெற்ற மொழிப்பாட தேர்வினை 43,562 மாணவர்கள் எழுதவில்லை. 27ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் 18,476 மாணவர்கள் பங்கேற்காமல் இருந்துள்ளனர். 11 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களின் 4.8 % மாணவர்கள் சராசரியாக தேர்வினை எழுதாமல் இருந்துள்ளனர்.
10 ஆம் வகுப்பு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்ற தேர்வில் பங்கேற்க 9,74,321 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 45,020 பேர் முதல் நாளில் மொழித்தாள் தேர்வு எழுதாமல் இருந்தனர்.4.6 % பேர் தேர்வினை எழுதாமல் இருந்துள்ளனர். 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வு எண்ணிக்கை அடிப்படையில் 27 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் தேர்வினை எழுத வேண்டும்.