சென்னை: வருமான வரி தினத்தை ஒட்டி சென்னை ஆழ்வார்ப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டின் "Super Tax Payer" நடிகர் ரஜினிகாந்த் - tamizhisai sounderrajan
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்தியவருக்கான விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டின் "Super Tax Payer" நடிகர் ரஜினிகாந்த்
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருது வழங்கினார்.
இந்த விருதை ரஜினிகாந்துக்கு பதில் அவரது மகள் ஐஸ்வர்யா விருதை பெற்றுக் கொண்டார். மேலும் ரஜினிகாந்த் 'Super Star' மட்டுமல்ல "Super Tax Payer" என்று தமிழிசை புகழாரம் சூட்டினார்.