ஆட்டோமொபைல் துறையில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள விற்பனைச் சரிவால் டீலர்களிடம் ஏராளமான வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன.
இதனால் சில நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைக் குறைக்கும் நோக்கில் வேலைநாட்களைக் குறைத்து வருகின்றன. அந்த வகையில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சரக்கு வாகன உற்பத்தி நிறுவனமான அஷோக் லேலண்ட் நிறுவனமானது அண்மையில், செப்டம்பர் 30ஆம் தேதி, அக்டோபரில் நான்கு நாட்கள் என மொத்தம் ஐந்து நாட்கள் வேலையில்லாத நாட்களாக அறிவித்தது.
இந்நிலையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தைச் சேர்ந்த சுந்தரம் கிளைட்டன் நிறுவனமும், தனது முக்கிய தொழிற்சாலைகளில் நாளை (அக்டோபர் 1) வேலையில்லாத நாளாக அறிவித்துள்ளது. ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் சுந்தரம் கிளைட்டன் நிறுவனம், தொழிலில் தற்போது நிலவும் மந்த நிலைக் காரணமாக தங்களது உற்பத்தியைக் குறைப்பதாகத் தெரிவித்துள்ளது. பங்குச் சந்தைகளுக்குத் தகவல் தெரிவிக்கும் வகையில் அந்நிறுவனம் இத்தகவலை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நயன்தாராவின் 'நெற்றிக்கண்' - முக்கிய வேடத்தில் தனுஷ் மச்சான்!