உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசை விமர்சித்ததாகவும், தமிழ்நாடு முதல் மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் அவதூறு கருத்துகள் தெரிவித்ததாகவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக, தமிழ்நாடு அரசு தரப்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இதேபோல் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விமர்சித்தது என ஸ்டாலினுக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாகப் பேசிய ஸ்டாலினை, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.