தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவிக்கு கத்திக்குத்து: காதலன் தற்கொலை முயற்சி - தற்கொலை முயற்சி

காதலியான கல்லூரி மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்த காதலன் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

காதலியை கொலை செய்த காதலன்
காதலியை கொலை செய்த காதலன்

By

Published : Sep 23, 2021, 4:15 PM IST

Updated : Sep 23, 2021, 5:34 PM IST

சென்னை: குரோம்பேட்டை ராதாநகரைச் சேர்ந்தவர் மதியழகன். மாநகர அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் சுவேதா (25) தாம்பரத்திலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று(செப்.23) கல்லூரி அருகேவுள்ள ரயில் நிலையம் செல்லும் வழியில் சுவேதாவிற்கும் திருக்குவளை பகுதியைச் சேர்ந்த அவரது காதலர் ராமச்சந்திரன் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென சுவேதாவின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதையடுத்து அவரும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

காவல் துறை விசாரணை

இதனைக் கண்டு பொதுமக்கள் சேலையூர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்த காவலர்கள், பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலியின் கழுத்தை அறுத்த காதலன்

தற்கொலைக்கு முயன்ற ராமச்சந்திரன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில், ரயில் நிலையம் அருகே காதலியின் கழுத்தை அறுத்துக் காதலன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:காதலியை 17 முறை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞன்: கேரளாவில் பயங்கரம்

Last Updated : Sep 23, 2021, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details