சென்னை:ஓலா, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுக்கு கூடுதல் வாடகை கொடுக்க வேண்டும், இந்நிறுவனங்கள் பெறும் கமிஷனைக் குறைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட கால்டாக்சி ஓட்டுநர்கள் இன்று சென்னை சேப்பாக்கத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
அண்ணா சாலையில் வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்கள் திடீர் சாலை மறியல் - Sudden roadblock by drivers stopping vehicles at Anna Salai
சென்னை அண்ணா சாலையில் கால்டாக்சி ஓட்டுநர்கள் திடீரென வாகனங்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கூட்டம் அதிகமாகச் சேர்ந்ததால் காவல் துறையினர் சிலரை கைதுசெய்து, அங்கு போராடியவர்களைக் கலைந்துசெல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
காவல் துறையினர் கைதுசெய்ததைக் கண்டித்து அண்ணா சாலையில் தங்களுடைய வாகனங்களை நிறுத்திவிட்டு அருகே போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் சில நிமிடங்கள் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை அதிவிரைவுப் படையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அண்ணா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி கலைக்க முற்பட்டனர். இதனால் அந்தப் பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது.
டீசல், பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு ஏற்ப விலைப்பட்டியலை மாற்றி அமைக்க வேண்டும். தமிழ்நாடு அரசே விலைப்பட்டியலை நிர்ணயிக்க வேண்டும்" என்றார்.