தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புறநகர் ரயில்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்! - COVID RESTRICTIONIS IN LOCAL TRAIN STATION

புறநகர் ரயில்களில் இன்று (ஜுன் 25) முதல் பொதுமக்களும் பயணிக்கலாம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்ததை அடுத்து, தாம்பரம், பல்லாவரம் ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பொதுமக்களுக்கு புறநகர் ரயில்கள் தொடக்கம், புறநகர் ரயில்களில் மக்கள் கூட்டம்
புறநகர் ரயில்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்

By

Published : Jun 25, 2021, 3:39 PM IST

Updated : Jun 25, 2021, 4:11 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்றின் தாக்கம் கணிசமாக குறைந்துவருவதால், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனிடையே, கடந்த ஜுன் 7ஆம் தேதி முதல் 208ஆக இருந்த மின்சார ரயில் சேவையின் எண்ணிக்கை 279ஆக அதிகரிக்கப்பட்டது. பின்னர், ஜுன் 14ஆம் தேதி முதல் இந்த எண்ணிக்கை 323 ஆக அதிகரிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு அனுமதி

இந்நிலையில், சென்னை புறநகர் ரயில்களில் ஒன்றிய, மாநில அரசுப் பணியாளர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், அத்தியாவசியப் பணியாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதி இருந்தது. இன்று முதல் கரோனா கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றிப் பொதுமக்களும் பயணிக்கலாம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொலைதூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒருவழிப் பயணம் மட்டுமே மேற்கொள்வதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்களில் அதிகரித்து காணப்படும் மக்கள் கூட்டம்

ஆண்களுக்கு சிறு கட்டுப்பாடு

இதில், பெண்கள், பெண்களுடன் பயணிக்கக்கூடிய 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் எனவும், ஆண்கள் 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் முக்கிய நேரத்தைத் தவிர்த்து அதாவது காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், பின்னர் இரவு 7 மணி முதல் கடைசி நேரம் வரையிலும் பயணிக்கலாம் என்றும், ரயில்கள் இயக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. பொதுமக்களும் ஆர்வத்துடன் ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ரயில் நிலையங்களில் முகக்கவசம் இன்றி வருபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோயில்கள் திறப்பு எப்போது? முதலமைச்சரின் கையில் முடிவு - சொல்கிறார் சேகர் பாபு

Last Updated : Jun 25, 2021, 4:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details