சென்னை: 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த மற்றும் வருகை புரியாத தேர்வர்கள் துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு ஜூலை 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரையிலும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள தகவலில், மே மாதம் நடைபெற்ற 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத, தேர்வு வருகை தராத மாணவர்கள், தேர்ச்சி பெறாது பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 27.6.2022 (திங்கட்கிழமை) முதல் 4. 7.2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் ( ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோன்று,தனித்தேர்வகளாக தேர்வு எழுதியவர்கள் 27.6.2022 முதல் 4.7.2022 வரையிலான நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்வது குறித்தும், தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் https://www.dge.tn.gov.in/என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
10ஆம் வகுப்பு தேர்வினை எழுதுவதற்கு தேர்வுக் கட்டணம் ரூ.125, ஆன்-லைன் பதிவு கட்டணம் ரூ.50 எனவும் கட்டணமாக ரூ.175 பள்ளிகளிலோ அல்லது சேவை மையங்களிலோ பணமாக செலுத்த வேண்டும்.
12ஆம் வகுப்பு தேர்வினை எழுதுவதற்கு, ஏற்கனவே 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வியுற்ற பாடங்களில் தேர்வெழுதும் தேர்வர்கள் மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வியுற்ற பாடங்களில் தேர்வெழுதும் தேர்வர்கள் ஓவ்வொரு பாடத்திற்கும் ரூ-50 வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ.35 செலுத்த வேண்டும். ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். 12ஆம் வகுப்பு தேர்வினை முதன்முறையாக எழுதவுள்ள தேர்வர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.150, இதரக் கட்டணம் ரூ.35 என மொத்தம் ரூ.185 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.
குறிப்பிபட்ட நாட்களில் விண்ணப்பம் செய்யாத மாணவர்கள் ஜூலை 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் கூடுதல் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் பதிவு செய்யும் அளிக்கப்படும் விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசுத் தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பெற முடியும். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் தேர்வு மையம் குறித்தும் இடம் பெற்று இருக்கும். எனவே விண்ணப்பத்தின் போது அளிக்கும் ஒப்புகை சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களையும் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு அட்டவணை:
ஆகஸ்ட் 2 ஆம் தேதி மொழித்தாள்
ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆங்கிலம்
ஆகஸ்ட் 4 ஆம் தேதி கணக்கு