தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஆசிரியர்களை துன்புறுத்தினால் மாணவர்களுக்கு TC மற்றும் CC-யில் காரணம்கூறி நீக்கப்படுவர்' - அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி - பள்ளி கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு

ஆசிரியர்களுக்கு மாணவர்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால் பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்றும்; பள்ளிக்கு மாணவர்கள் கைப்பேசி எடுத்து வரக்கூடாது எனவும் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேரவையில் பேசியுள்ளார்.

மாணவர்கள்,பள்ளி மாணவர்கள்
ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தொந்தரவு தந்தால் பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவர்-அமைச்சர் அன்பில் மகேஷ்

By

Published : May 9, 2022, 5:57 PM IST

Updated : May 9, 2022, 9:28 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல் துறை, தீயணைப்பு மீட்புப் பணிகள்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாமக சட்டப்பேரவை கட்சித்தலைவர் ஜி.கே. மணி ஆசிரியர்கள் மீதான மாணவர்களின் தாக்குதல்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்குப்பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'வரும் கல்வியாண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திய பிறகே பாடங்கள் நடத்தப்படும்' எனக் குறிப்பிட்டார். இன்றைய கால கட்டத்தில் கவனச் சிதறல்கள் அதிகரித்துள்ளன எனத்தெரிவித்த அவர், 'மன அழுத்தத்தில் இருந்த குழந்தைகளைக் கட்டுப்படுத்தும் விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன' எனவும் கூறினார்.

எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறைகூறுவது தவறு என்றும் பள்ளிகள் - பெற்றோர்கள் - அரசு ஆகியோருக்கு கூட்டுப்பொறுப்பு உள்ளது என்றும் குறிப்பிட்ட அவர் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், மாற்று சான்றிதழிலும் (TC) நன்னடத்தை சான்றிதழிலும் (Conduct Certificate) என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்தார்.

பள்ளியில் கைப்பேசிக்குத் தடை: மேலும் பேசிய அவர் ’’எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறைகூறுவது தவறு என்றும் பள்ளிகள்,பெற்றோர்கள்,அரசு என அனைவருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது’’ என்றும் குறிப்பிட்டார். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், மாற்றுச்சான்றிதழிலும், நன்னடத்தை சான்றிதழிலும், என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக்குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்றும், மேலும் பள்ளிக்கு மாணவர்கள் கைப்பேசி எடுத்து வரக்கூடாது எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:வழக்கம்போல் விடைத்தாள் திருத்தப்படும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Last Updated : May 9, 2022, 9:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details