தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உக்ரைனில் இருந்து திரும்பிய 21 தமிழ்நாட்டு மாணவர்கள்! - உக்ரைனில் இருந்து திரும்பிய 21 தமிழ்நாட்டு மாணவர்கள்

உக்ரைனிலிருந்து, டெல்லி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு 21 மாணவ, மாணவிகள் இன்று(மார்ச்.01) வந்து சேர்ந்தனர்.

உக்ரைனில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு இருபத்தொரு மாணவ
உக்ரைனில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு இருபத்தொரு மாணவ

By

Published : Mar 1, 2022, 3:19 PM IST

உக்ரையினிலிருந்து மீட்கப்பட்ட 250 இந்தியா்களுடன் ஏா்இந்தியா மீட்பு விமானம் நேற்று(பிப்.28) டெல்லி விமானநிலையம் வந்து சேர்ந்தது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மருத்துவ மாணவ,மாணவிகள் (சென்னை 10,கோவை 4,திருப்பூா் 2, திருநெல்வேலி 1, தூத்துக்குடி 1, கன்னியாகுமரி 1, கடலூர் 1, திருப்பத்தூா் 1) இன்று(மார்ச்.01) அதிகாலை சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்தனர்.

இதனையடுத்து அவர்களை தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்று மாணவ-மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதைத்தொடர்ந்து அவரவா் வீடுகளுக்கு தமிழ்நாடு அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர். நாடு திரும்பிய மாணவ, மாணவிகளை பார்த்த அவர்களது பெற்றோர் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.

உக்ரைனில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த 21 மாணவ மாணவிகள் வருகை

பின்னர் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கட்டித்தழுவி தங்களது அன்பை வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து பேசிய மாணவ மாணவிகள், “தங்களுக்குப் படிப்பை விட்டு வர மனம் இல்லை என்றும், இது போன்ற போர் சூழ்நிலை எங்களுக்கு பெரும் மனவேதனை அளிக்கிறது என்றும்” வேதனைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழ்நாட்டு மாணவர்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details