உக்ரைனின் பக்கத்து நாடான ஹங்கேரி, ருமேனியா ஆகிய நாடுகளிலிருந்து சிறப்பு விமானங்கள் டெல்லி, மும்பை வந்தன. நேற்று முன் தினம் (பிப்.27) வரை 20 தமிழ்நாடு மாணவர்கள் டெல்லியிலிருந்து விமானம் சென்னை மூலம் வந்தனர். இந்நிலையில் மாணவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை மூலமாக அவரவர் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று(பிப்.28) மாலை டெல்லியிலிருந்து சென்னையை சேர்ந்த ராகுல், விஸ்டா ஜெய்குமார், கோவையை ஷாரன் மணியன், திருச்சியை சேர்ந்த நித்தீஸ் ஆகியோர் வந்தனர்.
இவர்களை தமிழ்நாடு அரசின் அயலக நலம் மற்றும் மறுவாழ்வு துறை அலுவலர்கள் வரவேற்றனர். திருச்சி மாணவரை காரிலும், கோவை மாணவியை விமானத்திலும் அனுப்பி வைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் மாணவி விஸ்டா ஜெயக்குமார் கூறுகையில், ”உக்ரைனிலிருந்து அருகில் உள்ள ருமேனியா எல்லையில் உக்ரைன் நாட்டினரும் பிற நாட்டினரும் அதிக அளவில் குவிந்து உள்ளதால் எல்லையை கடக்க முடியவில்லை.