தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பூந்தமல்லியில் மாணவர்களை வெளியே நிறுத்திய பள்ளி நிர்வாகம்

பூந்தமல்லியில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிக்கு வந்த மாணவர்களை கட்டணம் செலுத்தவில்லை என வெளியே நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

ஜோசப் மேல் நிலைப்பள்ளி
ஜோசப் மேல் நிலைப்பள்ளி

By

Published : Jun 13, 2022, 1:22 PM IST

திருவள்ளூர்:பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் மேல் நிலைப்பள்ளியில் 5,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று (ஜூன் 13) வழக்கம்போல பள்ளி திறக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் மானவ-மாணவியர்களை உற்சாகமாக இனிப்புகள் வழங்கி வரவேற்று வருகின்றனர்.

ஆனால் முதல் நாள் பள்ளிக்கு ஆர்வத்துடன் வந்த மாணவர்களை, கட்டணம் செலுத்த வில்லை எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்காமல் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டனர்.

மாணவர்களை பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என வெளியே நிறுத்தியதால் பரபரப்பு

இதனால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:பள்ளிகள் திறப்பு: கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும் - மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details